Image

Matrimonyvizha

Story Details

நெஞ்சார்ந்த நன்றிகள்...

நெஞ்சார்ந்த நன்றிகள்...

Anto & Dayana | May 05, 2025

மேட்ரிமோனி விழா ( www.matrimonyvizha.com) இணையதளத்தின் மூலம் நாங்கள் இணைந்தோம் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறோம்.

திருமண வரனைத் தேடி பல இணையதளங்களில் பதிவு செய்து முயற்சி செய்து கொண்டிருந்தோம். ஆனால் இறைவனின் இரக்கத்தால் ஆசியோடும், மேட்ரிமோனி விழா மூலம் எங்கள் வாழ்க்கைப் பயணம் ஒன்றிணைந்தது.

இது வெறும் திருமண தகவல் இணையதளம் மட்டுமல்ல; எங்களை அன்போடும் அக்கறையோடும் வழிநடத்திய ஒரு குடும்பமாக இருந்தது. குறிப்பாக, சோர்வும் ஏமாற்றமும் ஏற்பட்ட நேரங்களில் ஊக்கமளிக்கும் வார்த்தைகள், தொடர்ந்து வழங்கிய ஆலோசனைகள் மற்றும் எங்களுக்காக செய்த ஜெபங்கள் ஆகியவை எங்களுக்கு மிகுந்த ஆறுதலாகவும் நம்பிக்கையாகவும் இருந்தன.

இந்த மேட்ரிமோனி குழுவினர் எங்கள் வாழ்க்கையின் முக்கியமான திருப்புமுனையில் பெரிதும் உதவியுள்ளனர் என்பதை நன்றியுடன் குறிப்பிட விரும்புகிறோம்.

எங்கள் இதயப்பூர்வமான நன்றிகளையும் வாழ்த்துகளையும் மேட்ரிமோனி விழா குழுவினருக்கு தெரிவித்துக் கொள்கிறோம். இறைவன் அவர்களுடைய சேவையை மேலும் ஆசீர்வதித்து, இன்னும் பல குடும்பங்கள் இணைவதற்குக் காரணமாக இருக்கட்டும்.

அன்புடன்,
மகிழ்ச்சியான தம்பதியர்

அன்டோ & டயானா